காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும்.!

Advertisements

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5.8 கிலோ மீட்டர் முதல் 7.6 கிலோ மீட்டர் உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளா வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன்காரணமாக கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை இன்று பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *