ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

Advertisements
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது, இல்லையெனில் உலகம் முழுவதும் அழிந்துபோகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது. ஈரான் விவகாரத்தில் நான் மிக முக்கியமான நடவடிக்கையை தொடங்கியபோது, அது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்ததாகத் தெரிவித்தார். ஏனெனில் ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது, இல்லையெனில் உலகம் முழுவதும் அழிந்துபோகும் என்று கூறினார்.
மேலும், அதை நாங்கள் அனுமதிக்க போவதில்லை, போர் முடிந்ததும், நான் காணும் சூழலின் அடிப்படையில், அந்த நல்ல நாட்களை நாம் விரைவில் மீண்டும் காண்போம் என்று தெரிவித்தார். போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன் என்றும், அவர்களால் இனி நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று தனக்குத் தோன்றவில்லை என்றும் கூறினார்.
எண்ணெய் போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான கடல்வழி பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்தும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், ஹார்முஸ் நீரிணை திறந்த நிலையில் உள்ளதாகவும், அமெரிக்க கடற்படையின் தலைமையிலான முற்றுகை நடவடிக்கையின் மூலம் அதைத் தாங்கள் கட்டுப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் நானும் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் போர் ஒப்பந்தம் முடிவுக்கு வரலாம் எனவும் தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *