
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஆங்கில புத்தாண்டிலிருந்து உயர்ந்த வண்ணமே இருந்தது. கடந்த வார இறுதியில் தங்கம் சவரனுக்கு ரூ.57,720-க்கு விற்பனையானது.
அதனைத் தொடர்ந்த இந்த வாரத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.57,720-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,800-க்கும் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,225-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


