தவெக அரசின் முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.!

Advertisements
தமிழக சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் மீதான விவாதம்  தொடங்கியது . .தமிழக சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்குகிறது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது.
இதைத்தொடர்ந்து, மறைந்த முக்கிய பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட உள்ளது. பின்னர், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் 2026-27-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள்.
உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்து பேச இருக்கின்றனர். மேலும், அடுத்த இரண்டு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை ஆகும். எனவே, 10ஆம் தேதி மீண்டும் சட்டசபைக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *