
கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் 9,000 ஏக்கரில் முழுவீச்சில் உற்பத்தி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தற்போது இரவு, பகலாக உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் முழுவீச்சில்ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு பகுதியில் சுமார் 9ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில்கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியாளர்கள் 9,000 ஏக்கரில் முழுவீச்சில் உற்பத்தி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தற்போது இரவு, பகலாக உப்பு உற்பத்தியில் தொழிலாளர்கள் முழுவீச்சில்ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் மிகக் கடுமையாகவும் உப்பள பகுதிகளில் அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். உப்பள பகுதி முழுவதும் வெள்ளகம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கிறது.
உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுவதால் மலைபோல் ஆங்காங்கே உப்பு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 6லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறும். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்துஉப்பு உற்பத்தி அதிக அளவில் நடைபெறுவதால் இலக்கை மிஞ்சும் அளவிற்கு உப்பு உற்பத்தி நடைபெறும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


