மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்.!

Advertisements

சென்னையில் மாநகராட்சித் துப்புரவுப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.

இந்தத் திட்டம் டிசம்பர் முதல் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறைகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்களின் மாண்பு காத்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களின் பிள்ளைகள் உயர் பொறுப்புகளில் அமர வேண்டும் என்பதே தனது கனவு என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு தன் கடமையைத் தொடர்ந்து செய்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.

மக்களும் தன்னொழுக்கம் கொண்டவர்களாக நடந்துகொண்டு பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *