Tittakudi Taluk: கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

Advertisements

திட்டக்குடி தாலுகா வடகரை ஊராட்சியில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி முகாமை  தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் நல்லூர் ஒன்றியம் வடகரை ஊராட்சியில் கால்நடைகளுக்கு மற்றும் ஆடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாநில திறன் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் தொடங்கி வைத்தார். மேலும் தமிழக முதலமைச்சர் அவர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 32 லட்சம் செலவில் புதிய பள்ளி கட்டிடத்தை அமைச்சர் குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ். ஒன்றிய குழு தலைவர் செல்விஆடிய பாதம். விருதாச்சலம் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் பெரியசாமி மற்றும் கால்நடை மருத்துவர்கள் பூவராக மூர்த்தி. நந்தகுமார் . பிரகாஷ் முத்துமைச்செல்வன். மற்றும் கால்நடை பராமரிப்பு துறை பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் திட்டக்குடியில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு துறைகள் மூலம் 1285 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ரூபாய் 4 கோடியே 65 லட்சம் மதிப்பில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வெ கணேசன் வழங்கி பேசுகையில் தங்களுடைய அரசு மக்கள் நலத்திட்டங்களை செய்து வருவதாகவும் மேலும் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் அனைத்து திட்டங்களும் கிடைக்க அரசு பாடுபடுவதாக தெரிவித்தார்.

மகளிர்உரிமை தொகை ரூபாய் 1000 இல்லம் தேடி கல்வி மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசி தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *