Tiruvottiyur: மீனவர்கள் சாலை மறியல்!

Advertisements

கடலில் கலந்து எண்ணைக் கழிவால் பாதிக்கப்பட்டதாகக் கூறி சாலை மறியல் ஈடுபட்ட திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மீனவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

கடலில் கலந்து எண்ணைக் கழிவால் பாதிக்கப்பட்டதாகக் கூறி திருவொற்றியூர் குப்பத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் பட்டினத்தார் கோவில் அருகே சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதனால் எண்ணூர் விரைவு சாலையில்  சென்னை துறைமுகத்திற்க்கு செல்லும் லாரிகள் நீண்ட வரிசையில் நின்று வந்த நிலையில் போக்குவரத்து போலீசார் மற்ற வாகனங்களை மாற்று பாதையில் இயக்கினர்.

இதனை அடுத்து தண்டையார்பேட்டை ஆர் டி ஓ இப்ராஹிம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரி இந்திரா  மற்றும் துணை ஆணையாளர் சக்திவேல் மற்றும் உதவி ஆணையாளர் சிதம்பரம் முருகேசன் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கேக்குப்பன் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே. குப்பன் தலைமையில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மீனவர்கள் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்இதனால் 4 மணி நேரம் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *