இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் !

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னை காவல் எல்லைக்குள் 1,562 சிலைகளை வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கியுள்ள நிலையில், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து, இயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உரிய அனுமதியின்றி விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *