
பணியிடத்தில் மனைவிக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த ஆயர்வதே மருத்துவர் ரத்தம் சொட்ட, சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவர் ஒருங்கிணைந்த ஆங்கில மற்றும் ஆயுர்வேத மருத்துவராக நாகை மாவட்டம் தேவூரில் கிளினிக் வைத்துள்ளார். இவரது மனைவி சுதா தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி சித்த மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்குக் கடந்த 2008 ம் ஆண்டு திருமணமாகி 13 வயதில் மகன் உள்ளான்.
இந்த நிலையில் செந்தமிழ்செல்வன் மற்றும் அவரது மனைவி சுதா கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. மேலும் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் நீதிமன்ற உத்தரவுப்படி மகனைப் பார்க்க மனைவி சுதா அனுமதிக்க மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் சுதா சித்த மருத்துவராகப் பணிபுரியம் தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செந்தமிழ்செல்வன் சென்றபோது அவரைச் சுதா மற்றும் அங்குள்ள பணியாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை, காலில் பலத்த காயமடைந்த அவர் நாகை அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியபோது தனது மாமனார் தன்னிடமிருந்து 200 பவுன் நகையைத் திருடிக் கொண்டு தனது மனைவியைத் தன்னிடம் சேர விடாமல் தடுத்து வருவதாகவும், இதனால் மனைவி என்னை ஆள் வைத்து அடித்துக் கொலை மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் நான் மருத்துவமனைக்கு நோயாளியாகத் தான் சென்றதாகவும் எனக்குச் சிகிச்சை அளிக்காமல் தாக்கிக் காயப்படுத்தியதாகவும் தெரிவித்தார். இந்தச் சம்பவம்குறித்து சித்த மருத்துவர் சுதாவிடம் கேட்டபோது தங்களுக்கு விவகாரத்து ஆகிவிட்டதாகவும், தினந்தோறும் மருத்துவமனைக்கு வந்து ஃபிளையிங் கிஸ் கொடுப்பது போன்ற தொந்தரவுகள் செய்வதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவரைப் பணியில் இருந்த பெண் சித்த மருத்துவர் தாக்கிய சம்பவம்குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

