
நடிகை சினேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இங்கனே ஒரு நீலபக்ஷி எனும் மலையாள படத்தில் நடித்து சினிமா உலகில் கால் பதித்தவர் சினேகா.
தமிழ் சினிமாவில் என்னவளே படம் மூலம் அறிமுகமாகி தனது அழகான சிரிப்பாலும் சிறந்த நடிப்பாலும் மக்களை ஈர்த்தார். Sneha
Sneha
அதனை தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசீகரா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், ஆட்டோகிராப், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம் போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்தார்.
Sneha
சமீப காலங்களில் கவனத்தை ஈர்க்க தவறிய சினேகா, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். வசீகரா படத்தில் விஜய்யுடன் நடித்த சினேகா, 20 வருடங்கள் கழித்து அவருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

