Naam Tamilar Katchi: வாக்கு சேகரிக்க தொடங்கியது நாம் தமிழர் கட்சி!

தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்திகா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வர இருக்கும் 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.இதில் ஆண் வேட்பாளர்கள் 20 ம் பெண் வேட்பாளர்கள் 20 பேரையும் நிறுத்தி நாடளுமன்ற தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராகச் சமூக செயற்பட்டாளர் கார்த்திகா என்பவரை அறிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குடி, நீர்முளை, புத்தூர், நத்தப்பள்ளம், செம்பியவேளூர், தொழுதூர், திருவிடைமருதூர், அருந்தவம்புலம், ஆய்மூர், மணக்குடி, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர். வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட வேட்பாளர் கார்த்திகாவிற்கு பொதுமக்கள் கும்பம் மரியாதையோடு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

இதில் 200க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.இதில் மண்டல செயலாளர் அகஸ்டீன் அற்புதராஜ், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், வேதாரண்யம் தொகுதி செயலாளர் முருகவேல் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *