Actor Ashwin Karthi: காதலியைக் கரம்பிடித்த சீரியல் நடிகர்!

Advertisements

நடிகர் அஸ்வின் கார்த்தி மேக்அப் ஆர்ட்டிஸ்ட் கார்த்திகாவை திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு ரசிகர்கள் பலரும்  திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போலத் தொடரில் துளசியின் கணவர் ராஜபாண்டியாக நடித்து வருபவர் அஸ்வின் கார்த்தி.ராஜ் டிவியில் தொகுப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கிய அஸ்வின் கார்த்தி, ஜீத்தமிழ், விஜய் டிவி, கலைஞர் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ளார், மேலும் ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் அஸ்வின் கார்த்தி மேக்அப் ஆர்ட்டிஸ்ட் கார்த்திகா என்பவரைச் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தார்.இருவரும் சமூக வலைதள பக்கங்களில் ஒன்றாக ரீலிஸ் போடுவது எனத் தன் காதலை ரசிகர்களுக்கு  உறுதிப்படுத்தினார்இந்த நிலையில், இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

அஸ்வின் கார்த்தி திருமணத்தில்வானத்தை போலநடிகர் நடிகைகள், மற்றும் சீரியல் நடிகர் நடிகைகள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.திருமணம்குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்இருவரும் ஒன்றான தருணம்எனச் சீரியல் நடிகர் அஸ்வின் கார்த்தி பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இவரின் திருமணத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *