
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட கடலோர தமிழகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. முன் எப்போதும் இல்லாத வகையில் 40 செ.மீ மழை பதிவானது.
இதனால் சென்னையில் இருக்கும் அனேக பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.இந்தநிலையில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளும் மீட்ப்பு பணிகளும் நடைபெற்றுவருகிறது.
புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த வரும் 18-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது.
மின்கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



