Thoothukudi: இரு தரப்பினரிடையே மோதல்.. போர்க்களமான சர்ச்!

Advertisements

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான பரி பேட்டரிக் தேவாலயத்தில் கூட்டம் நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போலீஸ் குவிப்பு.

தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு சொந்தமான பரி பேட்டரிக் தேவாலயம் தூத்துக்குடி 1ம் ரயிவே கேட் அருகே அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் குருவாகச் செயல்படும் செல்வின் துரை என்பவரது தலைமையில் புதிய சேகர கமிட்டி பதவியேற்றபின்பு கமிட்டி உறுப்பினர்கள் கோயில்பிச்சை, தேவராஜன், எஸ் டி கே ராஜன், ரூபன் ஆகிய நான்கு பேரைக் கமிட்டியிலிருந்து நீக்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து குருவானவர் செல்வின் துரை மற்றும் எதிர் தரப்பினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்துள்ளது.

இதன் காரணமாகக் காவல்துறை மற்றும் வருவாய் துறை தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பரி பேட்ரிக்  தேவாலயத்தில் எந்தவித சேகர கமிட்டி கூட்டமும் நடத்தக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலைப் பரி பேட்டரிக்கு ஆலயத்தில் வைத்துச் சேகர கமிட்டி கூட்டம் நடத்தப்படும் எனக் குருவானவர் செல்வின் துரை நேற்று whatsapp மூலம் உறுப்பினர்களுக்குத் தகவல்  கொடுத்துள்ளார்.

இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் இன்று தேவாலயத்தில் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அங்கு உள்ளே சென்று கூட்டம் விதிமுறைகளை மீறி நடத்துகிறீர்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து இரு தரப்பினர் இடையேயும் மோதல் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் ஆபாச வார்த்தைகளால் வசை பாடியுள்ளனர்.

மேலும் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் இரு பிரிவினரையும்  சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். தேவாலயத்தில் வைத்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *