
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பிரசித்திபெற்ற பஞ்சமி தேவி ஆலயத்தில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆனையறா பகுதியில் பஞ்சமி தேவி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தமிழ் பிரபல நடிகர் விஷால் சாமி தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக ஆலயத்திற்கு வந்த விஷாலுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. அப்போது அவர், “கை வட்டக குருதி பூஜை” என்ற சிறப்பு பூஜை செய்தார்.
இந்தப் பூஜை கேரள கோவில்களில் செய்யப்படும் சிறப்பு வாய்ந்த சடங்கு ஆகும். இது தீய சக்திகளை அகற்றி, தடைகளை நீக்கி வாழ்க்கையில் நன்மைகளை கொண்டுவர உதவும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. பின்பு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு நடிகர் விஷால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


