
வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்கவும் முதன் முதலாக 4நாட்கள் அறிவியல் கண்காட்சி 100 அரங்குகள் அமைத்து மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம்தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், சேர்க்காட்டில் தமிழக அரசுக்குச் சொந்தமான திருவள்ளூவர் பல்கலைக்கழகம் உள்ளது இதன் கட்டுபாட்டில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இன்று இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறுகையில் நுன்னறிவு பிரிவு சுற்றுசூழல் சமூக அறிவியல அகிய மூன்று துறைகள் புதியதாக இப்பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகம் துவங்கி முதன் முதலாகத் தற்போது மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் அவர்களின் கண்டுபிடிப்புகளை வெளிகொண்டு வரும் வகையில் வரும் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிவரையில் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
100 அரங்குகள் அமைக்கப்பட்டு இந்தக் கண்காட்சி நடைபெறும். இதில் மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தி விளக்கிக் கூறலாம் 4 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் தினசரி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த அறிவியல் கண்காட்சியைக் கண்டு பயனடைய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். மேலும் சிறப்பு பேருந்துகளும் இயக்கபடவுள்ளது. இதன் மூலம் இக்கண்காட்சிக்கு மாணவர்கள் வரலாம் இக்கண்காட்சியை திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் துவங்கி வைக்கிறார்.
இது மாணவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக அமையும் அனுமதி இலவசம் பொதுமக்களும் வந்து பார்வையிடலாம் வினாடிவினா போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்படவுள்ளது. நான் பொறுப்பேற்ற ஒன்றை ஆண்டுகளில் இப்பல்கலைக்கழக குறைகள் ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்து வருகிறேன் இப்பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் பட்டியல் பட்டங்கள் வழங்குவதும் முழுமையாக நடைபெற்றுள்ளது பல்கலைக்கழகத்தில் இ மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளோம் மாணவர்களே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யும் வசதியைச் செய்துள்ளோம்.
1. 20 லட்சம்மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. சில குறைகள் இருப்பினும் அது கல்லூரிகள் தவறு இருக்கிறது அவர்கள் சரியாக அனுப்பி வைத்தால் நாங்கள் பட்டங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம். டிஜிட்டல் முறையில் 2. 50 லட்சம் விடைத்தாள்களும் பழைய முறையில் 2, 50 லட்சம் விடைத்தாள்களும் திருத்தப்பட்டது. இதில் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்ட 2. 50 லட்சம் விடைத்தாள்கள் திருத்தம் 100 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது. திருவள்ளூவர் பல்கலைக்கழக விசாரணைக்குழு கேட்ட அனைத்து ஆவணங்களையும் இரண்டு தொகுதிகளாக வழங்கியுள்ளோம் எனக் கூறினார், பேட்டியின்போது உடன் பதிவாளர் செந்தில் வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

