Thirupathi laddu issue: மாநில அரசிடம் அறிக்கை கேட்குது மத்திய அரசு!

புதுடில்லி: ”திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் தற்போதைய நிலைகுறித்து அறிக்கை அளிக்கும்படி மாநில அரசிடம் கேட்டுள்ளேன், ” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டு கொழுப்பு கலப்பு தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசினேன். தற்போதைய நிலைகுறித்து அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு தவறு செய்தவர்கள்மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் ஆலோசனை

இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமைச்செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்குப் பிறகு, விரிவான தகவல்களுடன் அறிக்கை அளிக்கும்படி தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *