தீபாவளியின் மறைக்கப்பட்ட வரலாறு.. யாரும் அறியாத உண்மை..!

இருள் நீங்கி ஒளி பிறக்கும் நன்னாளாக, புன்னகையும் மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்கும் திருநாளாகக் கொண்டாடப்படுவது தான் தீபாவளி..

ஒவ்வொரு ஆண்டும் நாம ரொம்ப உற்சாகமாக் கொண்டாடுற தீபாவளி பண்டிகை அன்று புத்தாடை, பட்டாசு, வகை வகையான பலகாரங்கள்னு கொண்டாட்டத்துக்குக் பஞ்சமே இருக்காது. ஆனா, இந்த தீபாவளி பண்டிகைக்குப் பின்னாடி ஒரு பெரிய வரலாறும், புராணக் கதைகளும் இருக்குனு உங்களுக்குத் தெரியுமா? வாங்க, இன்னைக்கு தீபாவளியோட சுவாரஸ்யமான பின்னணியைத் தெரிஞ்சுக்கலாம்!”

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, தீபாவளினாலே நினைவுக்கு வர்றது கிருஷ்ணரின் நரகாசுர வதம் தான்! திருமாலின் வராக அவதாரத்தின் போது பூமிதேவிக்குப் பிறந்தவன் தான் பவுமன். இவன் பிரம்மனை நோக்கித் தவமிருந்து, ‘தன் சொந்தத் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது’ன்னு வரம் வாங்குறான். வரம் தந்த மமதையில அசுரனா மாறுன இவன், ‘நரகாசுரன்’னு அழைக்கப்பட்டு, தேவர்களையும் மனிதர்களையும் கொடுமைப்படுத்துறான்.

இவனோட அநீதியை அழிக்க, பூமிதேவியோட அவதாரமான தன் மனைவி சத்யபாமாவை அழைச்சுக்கிட்டு கிருஷ்ணர் போருக்குக் கிளம்புறாரு. போரின் முடிவில், நரகாசுரன் எய்த அம்பு சத்யபாமாவோட நெஞ்சில் பாயுது! ஆனா, அந்த வலியையும் பொருட்படுத்தாம, சத்யபாமா தன் சொந்தக் கையாலேயே நரகாசுரனை வதம் செய்யுறாங்க! தான் இறந்த இந்த நாளை மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியா கொண்டாடணும்னு நரகாசுரன் கேட்ட வரத்தின்படியே தீபாவளி பிறந்தது!

அதேநேரம் வடஇந்தியாவில், இராமர் இராவணனை ஜெயிச்சுட்டு 14 வருஷ வனவாசத்தையும் முடிச்சு, சீதை மற்றும் இலட்சுமணனோட அயோத்திக்குத் திரும்பிய நாளைதான் மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடுனாங்க! அதுவே தீபாவளியா மாறுச்சுன்னு நம்பப்படுது. அதுமட்டுமில்ல, கந்த புராணத்தின் படி, பார்வதி தேவி 21 நாட்கள் கேதார கௌரி விரதம் இருந்து, சிவபெருமான் அவங்களைத் தன் உடலின் ஒரு பாதியா ஏத்துக்கிட்டு ‘அர்த்தநாரீஸ்வரரா’ அவதாரமெடுத்த தினமும் இந்த தீபாவளி திருநாள்தான்!
இது மாதிரி பல்வேறு கதைகள்  சொல்லப்படுகிறது. “நம்ம ஊர்ல தீபாவளி அன்னைக்கு அதிகாலையில செய்யுற ‘கங்கா ஸ்நானம்’ எனப்படும் எண்ணெய்க் குளியலுக்குப் பின்னாடி ஒரு பெரிய ஆன்மீகத் தத்துவம் இருக்கு. உடலில் தேய்க்கும் நல்லெண்ணெய், நமக்குள்ள இருக்குற அகந்தை மற்றும் பொறாமையைக் கழுவுறதோட அடையாளம்!
சுடச்சுட ஜாங்ரி, முறுக்கு, ஓமப்பொடி பலகாரங்கள்… அப்புறம் புதுமணத் தம்பதிகளோட ‘தலை தீபாவளி’ கொண்டாட்டம்னு தீபாவளினாலே அது ஒரு தனி சந்தோஷம்தான்!” வண்ணப் பட்டாசுகளும், மத்தாப்பூக்களின் வெளிச்சமும் இல்லாமல் ஒரு தீபாவளியை நம்மால் நினைத்துப் பார்க்க முடியாது. இந்திய மக்களின் தீபாவளித் திருநாளை ஒளிரவைக்கும் மிகப்பெரிய சக்தி ‘சிவகாசி’.

1960-களில் இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு சிவகாசிக்கு வருகை தந்தார்.
வறட்சியான சூழலிலும் மக்களிடன் இருந்த உழைப்பு, அச்சகம் மற்றும் பட்டாசுத் தொழில் முனைவோரின் சுறுசுறுப்பைப் பார்த்து வியந்த நேரு, சிவகாசியை “குட்டி ஜப்பான்” என்று பாராட்டினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புகையைக் குறைக்கும் வகையில், அண்மையக் காலங்களில் சிவகாசி ஆலைகள் ‘பசுமைப் பட்டாசுகள்’ தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன..இருளை நீக்கி ஒளியைத் தரும் இந்த தீபாவளித் திருநாள், எல்லாரோட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *