CCTV Camera: மாட்டிக் கொண்ட திருடர்கள்!  

Advertisements

கேமிராவால் மாட்டிக் கொண்ட திருடர்கள்!

சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் பணத்தை பறித்துக் சென்ற இரண்டு வாலிபர்களைக் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்துப் போலீசார் தேடி வருகின்றனர்.

அகரம்சிகூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், திருமாந்துறை கிராமம், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி பத்மபிரியா (35). இவர்களது மகள் அஸ்வந்திகாஸ்ரீ(10).

பத்மபிரியா திருமாந்து றையில் உள்ள வங்கியில் நகை அடகு வைத்துக் கடன் பெற்றுள்ளார். இதற்கான வட்டியை கட்டுவதற்காகத் தனது வீட்டிலிருந்து ரூ.35 ஆயிரம் பணத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு, தனது மகளுடன் வங்கிக்குச் சென்றுள்ளார்.

வங்கியில் வட்டி கட்டுவதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து விட்டு, பணம் கட்டுவதற்காகக் காத்திருந்து உள்ளார். அப்போதுஅவரின் மகள் அஸ்வந்திகாஸ்ரீ ஸ்நாக்ஸ் வாங்கி கொடுக்கக் கேட்டு ள்ளார். இதற்காக அருகில் உள்ள சூப்பர் மார்க்கெ ட்டுக்கு தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள், பத்மபிரியா கையில் வைத்திருந்த பணப்பையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் சென்று உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பத்ம பிரியா சத்தமிட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த இளைஞர்கள் வேகமாகச் சென்று மறைந்து விட்டனர். இதுகுறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் பத்ம பிரியா புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மங்கள மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பக் குதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை பறித்துச் சென்ற 2 இளைஞர்க ளின் உருவம் அதில் தெளி வாகப் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்துப் போலீசார் அந்த இரு வாலிபர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *