
ஜனநாயகக் கட்சியினர் ஆவணமற்ற குடியேறிகள் மீது கருணை காட்டுக்கின்றனர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க நாட்டின் சார்லட் என்றப் பகுதியில் பயணிகள் ரயிலில் நடந்த கத்திக்குத்தில், ஒருவர் காயம் அடைந்தார். இந்த கத்திக்குத்து சம்பவம் நடத்தியதாக, 33 வயதான நபர் கைது செய்யப்பட்டார். இதை போன்ற சம்பவம் அப்பகுதியில் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில், வட கரோலினாவின் சார்லட்டில் சட்டவிரோத குடியேறியவரால் ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதை தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியினர் மற்ற அனைத்தையும் போலவே ஆவணமற்ற குடியேறிகள் மீது கருணை காட்டுக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.


