தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம்.!

ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி கேட்டு  மாவட்ட ஆட்சியரை சந்தித்து செங்கோட்டையன் மனு அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில், வருகின்ற 16 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக, தவெகவின் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இதையடுத்து அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் தவெகவில் தனக்கு எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்று கூறினார். இதைத்தொடர்ந்து, தலைவர் விஜய் வருகையின் போது ஈரோட்டில் பெரும் எழுச்சி ஏற்படும் என்றார். பின்னர், தனியார் இடம் தேர்வு செய்திருக்கிறோம், வீதி உலாவைத் தவிர்த்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *