
சென்னை: அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் (வயது 39) த/பெ.ராமசாமி, சின்னக் கருப்பு (வயது 31) த/பெ.இராமலிங்கம் மற்றும் சிறுவன் ஹரி (வயது 16) த/பெ.அய்யனார் ஆகிய மூவரும் சுற்றுலா சென்றுவிட்டு தங்கள் ஊருக்குத் திரும்பும் வழியில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், தாராபுரம் தெற்கு கிராமம்.
மதுரை நெடுஞ்சாலை அபூர்வா ஹோட்டல் அருகே உள்ள அமராவதி ஆற்றில் புதிய ஆற்றுப் பாலம் அருகே (16.1.2024) மாலை குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
திருப்பூர் அமராவதி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி இறந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா சென்று ஊர் திரும்பும் வழியில் ஆற்றில் குளிக்கச்சென்ற பாக்கியராஜ், சின்ன கருப்பு, ஹரி பலியாகினர்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


