ரம்யா பாண்டியனுக்கு மாப்பிள்ளை கொடுத்த வரதட்சணை!

Advertisements

சென்னை:

நடிகை ரம்யா பாண்டியனின் திருமணத்திற்காக அவருடைய கணவர் தான் வரதட்சணை கொடுத்தார், அதுவும் எவ்வளவு தெரியுமா? என்று ரம்யா பாண்டியனின் அம்மா பெயர் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். அதோடு ரம்யா பாண்டியனின் மாமனார் மற்றும் குடும்பம் பற்றியும் பல விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை ரம்யா பாண்டியன் டம்மி பட்டாசு என்ற படத்தில் மூலமாகத்தான் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால் அந்தப் படங்கள் பெரிய அளவில் ரம்யா பாண்டியனுக்கு பிரபலத்தைக் கொடுக்காமல் இருந்த நேரத்தில் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலர் வீட்டில் முடங்கி இருந்தனர்.

அந்த நேரத்தில் மொட்டை மாடியில் காத்துவாக்கில் போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியனுக்கு இணையம் முழுக்க ரசிகர்கள் குவிய தொடங்கி விட்டார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்குப் பலருடைய டிபியாக ரம்யாவின் புகைப்படங்கள் மாறி இருந்தது. அதற்குப் பிறகு ரம்யா பாண்டியனுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும், அவருடைய திறமையை வெளிக்காட்டலாம் என்று நினைத்து இருந்த நேரத்தில் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை.

இதனால் சின்னத்திரை பக்கமாகத் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். அதிலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

இதனால் சின்னத்திரை ரசிகர்களுக்குப் பரீட்சயமான ரம்யா பாண்டியன் வழக்கம்போலச் சோசியல் மீடியாவில் போட்டோ சூட் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த வருடம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசந்திரன் ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்றார். அப்போது அங்குப் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த நோவல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியிருக்கிறது.

இதை ரம்யா பாண்டியன் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதற்குப் பிறகு இருவருக்கும் ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் உள்ள கோவிலில் வைத்துத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சென்னையில் வைத்துக் கடந்த நவம்பர் 15ஆம் தேதி வரவேற்பு பிரமாண்டமாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ரம்யா பாண்டியன் குறித்து அவருடைய அம்மா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் எங்களுடைய சொந்த ஊர் திருநெல்வேலி தான். எங்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் இரண்டாவது தான் ரம்யா பாண்டியன். அவர் ரொம்பவே கெட்டிக்காரி, திறமையானவர்.

என்னுடைய கணவர் சில படங்கள் இயக்கியிருந்தார். ஆனால் அந்தப் படங்கள் தோல்வி அடைந்ததால் நாங்கள் எங்கள் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று பிசினஸ் செய்து வந்தோம். அங்கு விஷ பூச்சி கடித்து என்னுடைய கணவர் இறந்துவிட்டார். என்னுடைய கணவர் இறப்புக்கு பிறகு குடும்பத்தைக் கட்டி காத்தது ரம்யா பாண்டியன் தான்.

அதுபோலத் திருமணத்தில் எங்கள் முறைப்படி தாலி கட்ட வேண்டும் என்று ரம்யா சொன்னதால் மாப்பிள்ளையும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் சங்கீத், ஹெல்த்தி பங்க்ஷன் எல்லாமே அவர்களுடைய முறைப்படி தான் நடந்தது. மாப்பிள்ளை எப்படி நல்லவரோ அதுபோல அவருடைய குடும்பத்தினரும் ரொம்பவும் நல்லவர்கள்.

திருமணத்திற்காக எந்தச் செலவையும் பண்ண கூடாது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ரம்யா தான் ரிசப்ஷன் செலவை ஏற்றுக்கொண்டார். மாப்பிள்ளை குடும்பம் பஞ்சாப் மாநிலம் அவர்களுக்கு அங்கு எட்டு மெடிக்கல் லேப் இருக்கிறது. 65 பேருக்கு மேல் அவர்களிடம் வேலை செய்கிறார்கள். எங்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட அவர்கள் வரதட்சணை கேட்கவே இல்லை.

அதுபோலப் பஞ்சாப் முறைப்படி பொண்ணு வீட்டில் வரதட்சணை கேட்கக் கூடாதாம். மாப்பிள்ளை தான் வரதட்சணை கொடுத்துத் திருமணம் பண்ணிக்கனுமாம் அதனால் திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளையோட அப்பா ஒரு பெரிய தொகை கொடுத்து நகை வாங்கிக்க சொன்னார். திருமணம் முடிந்து ரம்யா பாண்டியன் செய்து கொடுத்த கேசரியை சாப்பிட்டு விட்டு மாப்பிள்ளையின் அம்மா ஒரு பாக்ஸில் ஒரு லட்ச ரூபாயை போட்டுக் கொடுத்தார்.

இப்படி அவர்கள் பணம் மட்டுமல்ல குணத்திலும் ரொம்ப நல்லவர்கள். மாப்பிள்ளை ரம்யாவை ரொம்ப அன்போடு பார்த்துக் கொள்கிறார். இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்ததற்கு ரம்யா மட்டுமல்ல நாங்களும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எமோஷனலாக ரம்யா பாண்டியன் அம்மா பேசியிருக்கிறார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *