அடிதடியில் இறங்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்கள் மத்தியில் அடிதடி ஏற்பட்டிருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஐம்பது நாட்களைக் கடந்திருக்கிறது. மற்ற ஏழு சீசன்களை ஒப்பிடும்போது நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் இந்தச் சீசன் மந்தமாகவே சென்று வருகிறது. ஐம்பது நாட்களைக் கடந்துமே இந்தச் சீசனில் பெரிதாகச் சுவாரஸ்யம் எதுவும் இல்லை. எந்தச் சீசனில் இல்லாத அளவிற்கு ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கியுமே இந்தச் சீசன் பெரிதாக எடுபடவில்லை.

இதில் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக உள்ளே நுழைந்திருக்கும் ராணவ் மற்றும் ரயான் இருவருக்குமிடையில் அடிதடி நிகழ்த்திருக்கும் புரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. பொம்மைக்காக நடந்த டாஸ்க்கில் ரயான் மற்றும் ராணவ் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி வரை சென்றது. இதனை மற்றப் போட்டியாளர்கள் தடுத்து நிறுத்தியுமே இருவரும் கத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நிஜமாகவே நடந்த சண்டையா அல்லது கவனக்குவிப்பிற்காக இவர்கள் எடுத்து நடத்தியதா என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *