செவ்வாழையின் செம்மைகள்.. சத்துக்களின் சுரங்கம்.. !

Advertisements

சென்னை:

செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தாலே ஆயுள் கூடும் என்பார்கள்… உள்ளுறுப்புகளுக்கு பல்வேறு சத்துக்களை தரக்கூடிய செவ்வாழைகள், கண்களுக்கும், சருமத்துக்கும் பேருதவி புரிகிறது. அந்தவகையில் செவ்வாழை தரும் நன்மைகள் ஒருசிலவற்றை பார்ப்போம்.

செவ்வாழையில் வைட்டமின் C, வைட்டமின் B6, வைட்டமின் B1, B2, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின், புரதம், கால்சியம், மக்னீசியம், கோலின், ஃபோலேட், கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் போன்றவை இந்தச் செவ்வாழையில் உள்ளது.

சத்துக்கள்:

இதில் வைட்டமின் A சத்துக்கள் அதிகமாகவே உள்ளன… எனவே, தான் மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செவ்வாழை சிறந்த தீர்வை அளிக்கக்கூடியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமும் 100 கிராம் செவ்வாழையை சாப்பிட்டு வருபவர்களுக்குக் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படுவதில்லை. இந்தப் பழத்தில் நியூட்டின் (Nutein), ஸியான்தினின் (zeaxanthin), பீட்டா கரோட்டின், வைட்டமின் A உள்ளதால், மாலைக்கண் நோய், கண் எரிச்சல், கண் வலி, கண்களில் உள் அடுக்குகளில் உள்ள தசைகள் பிரச்சனை உள்ளிட்ட பார்வை குறைபாடுகளை நெருங்க விடுவதில்லை.

கண் பார்வை:

கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் தினசரி செவ்வாழை பழத்தைச் சாப்பிட பார்வை தெளிவடையும். அதிலும், மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு உணவுக்குப் பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும் என்பார்கள்.

செவ்வாழையை போலவே, செவ்வாழையின் தோலிலும் அதிக சத்துக்கள் உள்ளன… வைட்டமின்கள் A, B, C, மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்கள் நிறைந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செவ்வாழையின் தோலில் உள்ளதால், கீழே வீசிவிடாமல் கண்களுக்கும் பயன்படுத்தலாம்.

செவ்வாழை தோல்:

செவ்வாழையில் உள்ள லியூட்டின் மற்றும் சியாக்ஸான்தின் போன்ற சத்துக்கள் கண்கள் சேதமடைவதை தடுக்கிறது… இதில் உள்ள வைட்டமின் A, ரொடாப்ஸின் போன்ற புரதம், மங்கலான பார்வையையும் கூர்மையாக்குகிறது. கண்களின் மீது இந்தத் தோல் அல்லது செவ்வாழைப்பழத்தை சிறிது வெட்டி வைக்கலாம். இதனால் கண்களும் குளிர்ச்சி பெறும், கண்ணில் நீர் வடிவதும் நின்றுவிடும்.

அடிக்கடி செவ்வாழைப் பழம் சாப்பிடுவதால் சருமத்தில் ஏற்படும் வடுக்கள் துளைகள் சரியாகின்றன. மேலும் இந்தப் பழத்தில் 75 சதவிகிதம் நீர் மற்றும் ஆன்டி ஆக்ட்சிடெண்ட் உள்ளதால், சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது,

பொதுவாக வாழைப்பழத் தோல்கள் அனைத்துமே சருமத்துக்கு நன்மை தரக்கூடியவை. சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் குறைக்கும் தன்மை வாழைப்பழ தோலுக்கு உண்டு… சோரியாசிஸ் அதாவது தடுப்புத் தோல் பிரச்சனையுள்ள இடத்தில் வாழைப்பழத் தோலை தடவினால் நிவாரணம் கிடைக்கும். அத்துடன், ஈரப்பதத்தை அளித்து நமைச்சலையும் தடுப்பு தன்மையையும் நீக்கும்.

சரும பொலிவு:

அப்படியிருக்கும்போது, வாழைப்பழங்களிலேயே அதிக சத்தானதாகக் கருதப்படும் செவ்வாப்பழத் தோலை, மிக்ஸியில் அரைத்து முகத்திற்கு தடவி வரலாம். இதனால் முகம் பொலிவு பெறுவதுடன், குளிர்ச்சியாகவும் இருக்கும்… முகப்பரு வடுக்கள்மீது இந்தத் தோலை தேய்த்தால் வடுக்கள் நீங்கும், சருமம் மிருதுவாகும்… பருக்கள், மரு இருந்தாலும், பழுத்த வாழைப்பழத் தோலை அதன் மேல் வைத்து, ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விட வேண்டும்.

அல்லது இந்தத் தோலை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, முகத்தில் வைத்து லேசாக மசாஜ் செய்யலாம்… சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளும் இதனால் நீங்கும்.

தினமும் ஒரு பழம்:

தினசரி 1 செவ்வாழை சாப்பிடும்போது பல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து செவ்வாழையில் நிறைந்துள்ளதால், எலும்புகளை வலுவடைய செய்கிறது. 21 நாட்களுக்குத் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வரும்போது ஆடிய பல் கூடக் கட்டியாகும் எனக் கூறப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *