Sonia Gandhi: கி.வீரமணிக்கு நன்றி கடிதம்!

Advertisements

கி.வீரமணிக்கு சோனியாகாந்தி நன்றி கடிதம்!

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்கு வர வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கடிதம் எழுதி இருந்தார்.

அதற்கு பதில் அளித்து கி.வீரமணிக்கு சோனியா கடிதம் எழுதியுள்ளார்.சென்னை பெரியார் திடலுக்கு என்னை அழைத்ததற்காக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ‘இந்தியா’ கூட்டணி மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு எனது நன்றியினை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கூட்டணி அரசியல் கூட்டணி என்பதை விட மேம்பட்டது.

Advertisements

சமூக நீதி தேவையின் அடிப்படையில் கட்டமைக்கப்படும். அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான செயல்திட்டத்தின் மூலம்தான், மக்களை பிரித்தாளும் பா.ஜனதா கட்சியின் கருத்தியலை தோற்கடிக்க முடியும்.

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் கண்ணியமாக, சுய மரியாதையுடன், வாழ்க்கை நடத்திட தந்தை பெரியாரின் தொலைநோக்கு தான் பாதை அமைத்து தந்தது. நாடு தழுவிய சமூகநீதி இயக்கங்களின் கருத்தியல் சார்ந்த பிணைப்பற்று, பிற்போக்கு சக்திகளை எதிர்த்து தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவது போராடியது தான் அடித்தளமாக அமைந்துள்ளது.

பெரியாரின் தொலை நோக்கும், அவரது கொள்கை சார்ந்த உறுதியான நிலைப்பாடும் இன்றைக்கும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வழி நடத்தட்டும். தங்களது வருங்கால செயல்பாடுகள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *