தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டக் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் –  முதல்வர் விஜய்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். இதில், உயிரிழந்த 13 குடும்பங்களுக்குத் தலா 25 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்த 40 பேருக்குத் தலா 5 இலட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக ஏற்கனவே வழங்கப்பட்டது.
இந்நிலையில், இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூடுதல் நிவாரணம் வழங்கிடக் கோரி முதலமைச்சரிடம் முறையிட்டனர். அவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று, கூடுதல் நிவாரணத் தொகையாக 5 கோடியே 25 இலட்சம் ரூபாய் உடனடியாக வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் 13 குடும்பங்களுக்கு மீதமுள்ள தொகையாக தலா 25 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்த 40 நபர்களுக்கு மீதமுள்ள தொகையாக தலா 5 இலட்சம் ரூபாயும் கூடுதல் நிவாரண நிதியாக நேரடியாக வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *