
Rajinikanth | Himalayas | Travel | Jailer | LIVE Updates
சென்னை : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010-ம் ஆண்டுக்குப் பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார்.2018-ம் ஆண்டில் ‘காலா’, ‘2.0’ படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாகப் பயணத்தைத் தவிர்த்து வந்தார்.
இதனிடையே, நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டுச் சென்றுள்ளார். போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து விமான நிலையம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் விமானம்மூலம் அங்கிருந்து இமயமலை செல்கிறார். இமயமலை செல்வதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், கொரோனா காரணமாக இமயமலை செல்ல முடியாமல் இருந்தது.
Rajinikanth | Himalayas | Travel | Jailer | LIVE Updates
தற்போது 4 ஆண்டுகளுக்குப் பின் இமயமலைக்கு செல்கிறேன்’ என்றார்.ஜெயிலர் திரைப்படம் எப்படி உள்ளது? படத்தில் நடித்ததில் உங்கள் அனுபவம் எப்படி உள்ளது? எனச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், படத்தை நீங்கள் பார்த்துவிட்டுக் கூறுங்கள்’ என்றார்.




