மதுரையில் ஜூன் 22-ந் தேதி தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்த திட்டம்!

அடுத்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி விஜய் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அன்று கட்சியின் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை:தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தைக் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். கட்சியின் கொள்கைகளை அறிக்கை வாயிலாக வெளியிட்டிருந்தார்.

2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு என அறிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துக்குப் புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்புச் செயலிமூலம் நடந்து வருகிறது. இதுவரை புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கியுள்ளது.

விஜய் தற்போது ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்துக்காகக் கடந்த சில நாட்களாக மயிலாப்பூரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் விஜய் டப்பிங் பேசி முடித்துள்ளார்.

இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ந் தேதி வெளியாக உள்ளது. தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட உள்ளது.

அடுத்த மாதம் (ஜூன்) 22-ந் தேதி விஜய் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அன்று கட்சியின் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *