முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சமூக வலைத்தளப் பதிவினை தொடர்ந்து, அவர் Web series முடித்துவிட்டு தற்போது Gaming பக்கம் திரும்பிவிட்டாரா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அப்படி என்ன சொல்லிவிட்டார் ஸ்டாலின்? ஏன் அவரைக் கலாய்க்கிறார்கள்? பார்க்கலாம் இந்த கானொளியில்…
சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சமூக வலைத்தளத்தில், கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான ‘மெத்’ பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.
இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை? பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது.
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லாவற்றுக்கும் ‘வழக்கு பதியப்பட்டுள்ளது’
என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது? முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்?
த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே எனக் கூறியிருந்தார். மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்த Vice City என்பது ஒரு ஆன்லைன் விளையாட்டாகும். GTA – Vice City என்பது உலகம் முழுவதும் புகழ்பெற்ற Open World Action-Adventure வீடியோ கேம்.
இதை விளையாடுபவர்கள் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் மிகப்பெரிய கற்பனை நகரத்திற்குள் சுதந்திரமாகச் சுற்றி வரலாம். வாகனங்களை ஓட்டலாம், பல்வேறு பணிகளைச் செய்யலாம், நகரத்தின் குற்ற உலகில் அதிகாரத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
இந்த விளையாட்டு முதன்முதலில் அக்டோபர் 2002-ஆம் ஆண்டு வெளியானது? இந்த விளையாட்டை உருவாக்கியது Rockstar North. இது GTA அதாவது Grand Theft Auto தொடரின் ஆறாவது முக்கிய வெளியீடாகும். இந்த கேமில் கூறப்படும் Vice City என்பது, உண்மையான அமெரிக்க நகரம் கிடையாது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள மியாமி நகரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
இதில், Ocean Beach – கடற்கரைப் பகுதி, -Vice Point – வணிக மற்றும் குடியிருப்புப் பகுதி, Downtown – நகரின் முக்கிய மையம், Little Havana – கியூபா கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பகுதி, Little Haiti – ஹைட்டி கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பகுதி, Starfish Island – பணக்காரர்கள் வசிக்கும் தீவுப் பகுதி என பல இடங்கள் உள்ளன.
1986-ஆம் ஆண்டு நடைபெறும் இந்த விளையாட்டு களத்தின் நாயகன் Tommy Vercetti சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் குற்றவாளி ஆவார். ஒரு போதைப்பொருள் பரிமாற்ற ஒப்பந்தத்திற்காக Vice City-க்கு Tommy அனுப்பப்படுகிறார். ஆனால் அந்த ஒப்பந்தம் தோல்வியடைந்து பணமும் போதைப்பொருளும் கொள்ளையடிக்கப்படுகின்றன.
இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யும் Tommy, புதிய கூட்டாளிகளைச் சந்திக்கிறார். எதிரிகளுடன் மோதுகிறார். பல்வேறு தொழில்களைக் கைப்பற்றுகிறார். குற்ற உலகில் தனது செல்வாக்கை அதிகரிக்கிறார். இறுதியில் Vice City-யின் அதிகாரமிக்க நபராக உருவெடுக்கிறார்.
இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்கள், கார்கள், பைக்குகள், படகுகள் ஓட்டலாம். ஹெலிகாப்டர் மூலம் பறக்கலாம். நகரத்தின் பல்வேறு இடங்களுக்குச் செல்லலாம். காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்கலாம். ஆயுதங்களைப் பயன்படுத்தி சண்டையிடலாம். வணிக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை வாங்கலாம். பல்வேறு Side Missions செய்யலாம்.புதிய வாகனங்களையும் ஆயுதங்களையும் பெறலாம்.
GTA Vice City கற்பனை விளையாட்டாக இருந்தாலும், அதன் பின்னணியில் உண்மையான உலகச் சம்பவங்களின் தாக்கம் உள்ளது.
இந்தக் கேமைத்தான் தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்துடன் ஒப்பிட்டு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் இட்ட பலரும் கடந்த திமுக ஆட்சியிலும் இதே போன்று போதைப் பொருள் நடமாட்டம் இருந்ததையும் அதை தடுக்கத் தவறியது ஏன் எனவும் விமர்சித்திருந்தார்கள். அதுமட்டுமின்றி TVK ஆட்சியை “Vice City”ன்னு troll பண்றதுக்கு முன்னாடி, உங்க DMK Files-ஐ கொஞ்சம் பாருங்க!
2G controversy முதல் TASMAC, மணல் கொள்ளை, டெண்டர் முறைகேடு புகார்கள் வரை… Grand Theft Dynasty-க்கு தனி history இருக்கு!ன்னு கலாய்ச்சிருக்காங்க…அதுமட்டுமில்லாம, வீட்டில் உட்கார்ந்து “Vice City-யைத்தானா விளையாடிக் கொண்டிருந்தீர்கள், அங்கிள் @mkstalin? என வெறுப்பேற்றி இருக்கிறார்கள்.
இதே DRI அமைப்பு 2021-ல் திமுக ஆட்சியில், தூத்துக்குடி துறைமுகத்தில் 1,515 கோடி ரூபாய் கொக்கைன் சுமா 303 கிலோ, 2024-ல் ₹180 கோடி மெத் எனப் பலமுறை பறிமுதல் செய்துள்ளது. அப்போது மாநிலக் காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? உண்மையில், தற்போதைய அரசின் கீழ் தமிழ்நாடு காவல்துறை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் வழக்குகள் சுமார் 30% உயர்ந்துள்ளதோடு, போதை மாத்திரைகள் பறிமுதல் 12 மடங்கு அதிகரித்துள்ளது எனவும்பதிவிட்டுள்ளனர். யார் என்ன சொன்னால் என்ன, நீங்க “Vice City” விளையாடுங்க திமுக தலைவரே..!