தங்க மோதிரம் திட்டம்… தமிழிசை விமர்சனம்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் சுமார் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு இன்று ( செப்-28 ) தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

ஜூன் 22 முதல் செப். 27 வரை பிறந்த குழந்தைகளுக்கு, 102 மையங்கள் மூலம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான அடையாள அட்டைகள் மருத்துவ அலுவலர்கள் மூலம் குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளன.

செப். 28 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு, அந்தந்த அரசு மருத்துவமனைகளிலேயே தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் சுமார்  4.41லட்சம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்  வழங்கப்படும் என தவெக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,    “  தங்க மோதிரம் கொடுக்கப் போகிறீர்கள்… தரமான பாலுக்கான தட்டுப்பாட்டை எப்போது சரி செய்யப் போகிறீர்கள்  ”     எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *