சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ் வெற்றி பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில், சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சன் உடன் மோதினார். இதில், சிறப்பாக விளையாடிய கனடாவின் லேலா பெர்னாண்டஸ் 7-5, 6-0 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், லேலா பெர்னாண்டஸ் சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.



