பிரபல நடிகர்கள் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் நடித்த ‘டோரதி’ திரைப்படம், முதல் மூன்று நாட்களில் 3.37 கோடி ரூபாய் வசூலித்துச் சாதனை படைத்துள்ளது.
பிரபல நடிகர்கள் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் ‘டோரதி’ படத்தில் நடித்துள்ளனர். இதில், நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகியாக நடித்துள்ளார். பிரபல இய்க்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது இசை அமைப்பாளராக இளையராஜாவின் ஆயிரத்து 540 ஆவது திரைப்படமாகும். இரண்டு நண்பர்களின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ஒட்டுமொத்தமாக 3.37 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

