இந்தியா – தஜிகிஸ்தான் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை.!

தஜிகிஸ்தானின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தஜிகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் எமோமாலி சோபிர்சோடாவை சந்தித்து கலந்துரையாடினார்..

தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பேவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். துஷான்பே விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவருக்கு தஜிகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் எமோமாலி சோபிர்சோடா மற்றும் தஜிகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய-பசிபிக் பிரிவின் தலைவர் ஷெராலி ஜோனோன் ஆகியோர் வரவேற்றனர்.

இதன் பின்னர், தஜிகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சருடன், அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துரையாடினார்.இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத் தளப் பதிவில், துஷான்பேயில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, தஜிகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

இதில், குறிப்பாக திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி ஆகியவற்றில், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *