Uttar Pradesh:காலையில் கணவருக்காக விரதம் – மாலை விஷம் வைத்த மனைவி!

கணவரின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருந்த மனைவி சிறுது நேரத்தில் அவரை விஷம் வைத்துக் கொன்றுள்ளார்.

கணவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்று மனைவிகளும், நல்ல கணவர் அமைய வேண்டுமென்று திருமமாகாத இளம்பெண்களும் கர்வா சௌத்(karwa chauth) என்ற விரதம் இருப்பர்.

பஞ்சாப், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானில் உள்ள குடும்பங்களில் பாரம்பரியமாகக் இந்த விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்த சைலேஷ் குமாரின்(32) மனைவி சவிதாவும் நேற்று, தன் கணவரின் நீண்ட ஆயுளுக்காகக் கர்வா சவுத் விரதத்தை மேற்கொண்டுள்ளார்.

காலை முதலே சவிதாவின் இந்தப் பிரார்த்தனைக்கு அவரது கணவர் சைலேஷ் குமாரும் அவருக்கு உதவியாக இருந்துள்ளார். மாலையில் விரதத்தை முடித்துக் கொண்டு இருவரும் ஒன்றாக உணவருந்தியுள்ளனர்.

அப்போது கணவருக்கு வைத்த உணவில் விஷம் கலந்திருந்த சவிதா சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று வருகிறேன் எனக் கூறி விட்டுத் தப்பியோடி விட்டார்.

மயங்கி விழுந்த சைலேஷ் குமாரை அவரது சகோதரர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி சைலேஷ் குமார் உயிரிழந்துள்ளார். இறப்பதற்கு முன்பு, மனைவி தனது உணவில் விஷம் வைத்திருந்தாரெனச் சைலேஷ் குமார் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாகச் சைலேஷ் குமாரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் சவிதாவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *