ஈரானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 19 பேர் பலி.!

Advertisements

ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் என 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உக்ரைன் ரஷ்யா முடிவுக்கு வரும்போது ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

ஹோர்முஸ் ஜலசந்தியைக் கட்டுப்படுத்தியுள்ளதாகக் கூறினார். அவ்வப்போது, ஈரான் ஒரு ட்ரோனைச் சுட்டு வீழ்த்துவதாகவும் ஆனாலும் தங்களிடம் வலிமையான கட்டுப்பாடு உள்ளது என்று கூறினார்.

கண்ணிவெடிகளை வீசும் ஒரு ராக்கெட்டை ஈரான் உருவாக்க முயன்றதாகவும், அதை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளதாகவும் கூறினார். ஈரானின் ஆட்சி நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதாகத் தெரிவிததார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *