இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார் !

Advertisements

‘ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். அவருக்கு வயது 41.

விதார்த், ரவீனா ரவி உள்ளிட்ட பலர் நடித்த ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. பல்வேறு விருதுகளும் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து பிரேம்ஜி நடித்த ‘சத்திய சோதனை’ என்னும் படத்தினை இயக்கினார்.

இந்நிலையில், சுரேஷ் சங்கையாவுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சினைக்காகச் சிகிச்சை எடுத்து வந்தார். அந்தச் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். இவருக்குத் தனிஸ் பாத்திமா பக்கீர் என்ற மனைவியும், ஆதிரா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். ஒரு மாதத்துக்கு முன்பு தான் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

‘சத்திய சோதனை’ படத்துக்குப் பிறகு செந்தில் நடித்துள்ள படத்தையும், யோகி பாபு நடித்துள்ள படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இதில் யோகி பாபு நடித்துள்ள படம் விரைவில் வெளியாகத் தயாராகி வருகிறது. சுரேஷ் சங்கையாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *