நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், கொலம்பியாவின் கேமிலா ஒசோரியோவை வீழ்த்தி பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அரினா சபலென்கா, கேமிலா ஒசோரியோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் சபலென்கா, ரஷ்யாவின் போலினா இயாட்சென்கோவை எதிர்கொள்கிறார்.



