இந்தியா–ஆப்கானிஸ்தான் T20 – இந்திய அணி அறிவிப்பு!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும், துணைக் கேப்டனாக திலக் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதில் ஜஸ்பிரீத் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் உடற்தகுதிச் சான்றிதழ் பெறுவதைப் பொறுத்தே போட்டிகளில் பங்கேற்பார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாத இறுதியில் ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள அதே அணியே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *