R. N. Ravi: காலம் தாழ்த்த ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது!

Advertisements

மசோதக்களை கண்டுகொள்ளாமல் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்த  ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.. உச்சநீதிமன்றம் அதிரடி..

கடந்த சில மாதங்களாக மாநில அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வருவதும், தொடர்ச்சியாக மோதல் வெடிப்பதும் நிகழ்ந்து வருகிறது. அரசின் மக்களுக்கான நலத்திட்ட  மசோதாக்களை  ஆளுநர்கள் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதாகக் குற்றம் சாட்டி  பிரச்சனை வெடித்து உச்சநீதிமன்றம் வரை செல்கிறது.

அதுபோல் ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்குத் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மாநில பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பபி வைக்கலாம். ஆனால், ஒரு மசோதாவை கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்தி  வைத்திருக்க முடியாது” என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

அதுமட்டுமல்ல சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால், ஒப்புதல் அளிக்க மறுப்பது மிகத் தவறு. மசோதாக்களை செயல்படுத்த முடியாமல்  வைத்திருப்பபது மாநில அரசின் அதிகாரத்தை ஆளுநர் துஷ்பிரயோகம் செய்வது மிகத் தவறு ஆகும். சட்டப்பிரிவு 200, ஆளுநர்களுக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருக்கும் அதிகாரத்தை வழங்குகிறது என்றாலும், அந்தச் சட்டப்பிரிவின்படி சம்பந்தப்பட்ட மசோதாவை மாநில சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு.

சட்டமன்றங்களில் சட்டங்களை நிறைவேற்றுவதையோ அல்லது சட்டங்களில் திருத்தம் செய்வதையோ, ஆளுநர்கள் தடுக்க அதிகாரம் கிடையாது. ஆளுநர்களின் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலும் இதே பிரச்சனை நிலவுவது அனைவருக்கும் தெரிந்ததே. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருவது  குறித்து தமிழ்நாட்டிலும் அரசுக்கும் ஆளுநருக்குமிடையில் சர்ச்சை வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழ் நாட்டு ஆளுநர் காதில் விழுமா? என்ன நடக்கப் போகிறது பார்க்கலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *