மீண்டும் தமிழக பாஜக தலைவராகிறாரா அண்ணாமலை? வெளியான அறிவிப்பு..!

Advertisements

தமிழக அரசியலில் பரபரப்பான அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை மீண்டும் தேர்வாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என  கூறப்படுகிறது. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை 2020-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

இதையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு அரசியல் போக்குகள் குறித்த அவரது அறிக்கைகள், திராவிட கட்சிகளுக்கும் கொள்கைகளுக்கும் எதிரான அவரது பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் விவாதங்களையும்  ஏற்படுத்தின.

இந்நிலையில், தற்போது பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறும்.

அந்தவகையில், செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, உட்கட்சி தேர்தலும் தொடங்கப்பட்டன.
அதில் கிளைத் தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு வாக்குப்பதிவு அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு 11 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. ஆனால் இந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 2 புள்ளி 97 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று ஒரே ஒரு தொகுதியில் தாமரையை மலரச் செய்து படுதோல்வியை சந்தித்துள்ளது.

அதுவும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பெற்ற இந்தத் தோல்வி   கட்சியின் மேல்மட்டத்தில் இருந்து கடைசித் தொண்டன் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாஜக வளர்ச்சி முகம் நோக்கி நாள்தோறும் வளர்ந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசியலைப் பொறுத்தவரை மக்களை ஈர்க்கும் வகையில் பேசக்கூடிய ஆற்றல் மிக்க ஒரு தலைவரால் மட்டுமே தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுக்க முடியும் என்பதை  டெல்லி பாஜக    உணர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது ஐசியூவில் இருக்கும் தமிழக பாஜகவுக்கு உயிர் கொடுக்க வேண்டுமானால் அண்ணாமலை போன்ற நபர்களால் மட்டுமே முடியும் என்கின்றனர் அவரது தீவிர ஆதரவாளர்கள்.

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை 2020-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு அரசியல் போக்குகள் குறித்த அவரது அறிக்கைகள், பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பின.

இந்நிலையில், தற்போது பாஜக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறும்.அந்தவகையில், செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, உட்கட்சி தேர்தலும் தொடங்கப்பட்டன. அதில் கிளைத் தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு வாக்குப்பதிவு அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த பதவிக்கு நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் பெயர்களும் அடிப்பட்டன.

ஆனால், பாஜக மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலையே தேர்வாகிறார் என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மூத்த தலைவர் ஒருவர், பாஜகவில்  மாவட்ட தலைவர்களே தேர்தல் இல்லாமல், ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநில தலைவர் பதவிக்கு மட்டும் எப்படி தேர்தல் நடக்கும். மாநில தலைவராக ஒருமனதாக மீண்டும் அண்ணாமலையே தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்றும் பாஜக மேலிடமும் அதையே விரும்புகிறது என்றும் கூறியுள்ளார்.

தாங்கள் மாநில தலைவராக வந்தால், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும் என்று மேலிடத்தில் வானதி, தமிழிசை உள்ளிட்டோர்  டெல்லி தலைமையிடத்தில் பேசியுள்ளனர்.  ஆனால், தேசிய தலைமை அண்ணாமலைக்கே தங்களது ஆதரவு கரங்களை நீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *