Advertisements

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள மாணிக்கம் தாகூர் இன்று டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தடைந்தார்.. சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அமைச்சர் ராஜேஷ்குமார் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கிரிஷ் சோடங்கர் மற்றும் மாணிக்க தாகூர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்போது அவர்கள் கூறுகையில்,
*கிரிஷ் சோடங்கர் கூறுகையில்,* தமிழ்நாடு காங்கிரஸ்க்கு இது ஒரு புதிய தொடக்கம் ஆந்திரபிரதேசம் காங்கிரஸ் பொறுப்பாளராகவும், தெலுங்கானா,கோவா,கர்நாடகா போன்ற மாநிலங்களில் பொறுப்பாளராக பணியாற்றியவரும், மேலும் இளைஞர் காங்கிரஸ் போன்ற பதவியில் பொறுப்பு வகித்தவரும், தற்போது நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி,மல்லிகார்ஜுனை கார்கே, சோனியா காந்தி அவர்களின் ஆசியோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீங்கள் பார்ப்பது போல ஒட்டுமொத்த தொண்டர்களும் மிகுந்த எழுச்சியுடன் இருக்கின்றார்கள் அவரது அனுபவம் அரசியல் ஆளுமையின் கீழ் தமிழ்நாட்டில் ஒரு புதிய தொடக்கத்தை நாம் உருவாக்க போகிறோம் அடிமட்ட நிலையில் இருந்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் தன்னை மறுமலர்ச்சி செய்து கொள்ளும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கிராம குழுக்கள் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றினார் அந்த பணிகளை தொடர்ந்து எடுத்துச் சென்று மாணிக்கம் தாகூர் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்துவார் அவரை நாங்கள் அன்போடு வரவேற்கிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கம் தாகூர் கூறுகையில்,
அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 141 வருடம் பாரம்பரியம் கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி இது நான் ஒரு பதவிக்கு வருவதோ அல்லது ஒருவர் பதவியில் இருந்து இன்னொரு பதவிக்கு மாறுவதோ எங்களுடைய இயக்கத்தில் சாதாரணமாக நடப்பது.
ஆனால் என்னை பொறுத்தமட்டில் இந்த பதவி ஏற்பு விழா கிடையாது இது ஒரு பொறுப்பேற்கின்ற விழா இந்தப் பொறுப்பு என்பது தமிழகத்தினுடைய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த அருமை சகோதரர் செல்வப் பெருந்தகை அவரிடம் இருந்து அந்த பொறுப்பை பெற்று கொள்கிற நாள்தான் இந்தப் பொறுப்பை உண்மையாகவும் மனசாட்சியுடனும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ப காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு இணங்க வரும் காலத்தில் செயலில் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
மேலும் இதை மிக முக்கியமான தருணமாக பார்க்கிறோம். காங்கிரஸ் கட்சியை நீண்ட இடைவெளிக்கு பிறகு 59 வருடங்களுக்கு பின்னர் ஒரு ஆட்சியில் பங்கு வகிக்கிறது எங்களுடைய பங்கு என்பது தமிழக அரசியலில் 59 வருஷத்துக்கு பிறகு வந்திருக்கு. இதுவே எங்களுக்கு மிகப்பெரிய பெருமை. இந்தப் பெருமையை பெற்றுத் தந்த கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் தொண்டர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளராக செயல்பட்டு தமிழக காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய அரசியல் வாய்ப்புகளை உருவாக்கியவர் தற்போது கோவா மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கூட்டணியில் இரண்டு முக்கிய அமைச்சர் இரண்டு அமைச்சர் பொறுப்பு ஏற்க காரணமாக இருந்தவர் எல்லா பெருமையும் இவரையே சேரும்.
மேலும் கோவாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவார் என்ற நம்பிக்கையும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் தமிழகத்தில் கூட்டணி அரசை வலுப்படுத்தி 2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை நோக்கி காங்கிரஸ் கட்சியின் அமைப்பையும் இயக்கத்தையும் பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.
Advertisements



