கோவையில் நடைபெற்ற ஏ.ஜே.கே. விளையாட்டு திருவிழாவில் ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘ஏ.ஜே.கே. விளையாட்டு திருவிழா நடைபெற்றது. இதில், கால்பந்து, கபடி, கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் செஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளும், சிறந்து விளங்கிய வீரர்களுக்கு தனிப்பட்ட விருதுகளும் வழங்கப்பட்டன. இதில் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
https://we.tl/t-
——————————
2. அனைத்துக் கல்லூரிகளிலும் கராத்தேயை அறிமுகப்படுத்தினால், மாணவர்களிடம் சுயக்கட்டுப்பாடு உருவாகி போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என கோயம்புத்தூர் கராத்தே அசோசியேஷன் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
கோவை ஜி.ஆர்.டி. கலைக் கல்லூரியில் 38-ஆவது கோயம்புத்தூர் அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் 60″க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து எல்.கே.ஜி. முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான 1,500″க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். உலக கராத்தே கூட்டமைப்பு விதிகளின்படி, கற்பனைச் சண்டையான ‘கட்டா’ மற்றும் நேரடிப் போட்டியான ‘குமித்தே’ ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோயம்புத்தூர் கராத்தே அசோசியேஷன் தலைவர் வீரமணி, தற்காப்பு மட்டுமின்றி சுயக்கட்டுப்பாடு மற்றும் மனக்கட்டுப்பாட்டை வளர்க்கும் வாழ்க்கைப் பயிற்சி என்றும் தெரிவித்தார். அனைத்துக் கல்லூரிகளிலும் கராத்தேயை அறிமுகப்படுத்தினால், மாணவர்களிடம் சுயக்கட்டுப்பாடு உருவாகி போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்று கூறினார்.
