
திருவனந்தபுரம்: சர்ச்சைக்குரிய ‛கேரள ஸ்டோரி ” டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சுதிப்தோ சென் இயக்கத்தில், அதா சர்மா, யோகிதா பிகானி, ஆகியோர் நடிப்பில் கடந்தாண்டு மே மாதம் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’. பெரும் சர்ச்சைக்கு இடையே ரிலீசானது.
இப்படம் கேரளாவில் ஹிந்து பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் ,வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது போன்றும் கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள், எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த நிலையில், கேரள ஸ்டோரி திரைப்படம், அரசு தொலைகாட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாக வெளியான அறிவிப்புக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது, , பா.ஜ., ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரசார இயந்திரமாக அரசுத் தொலைக்காட்சி மாறக் கூடாது, பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த முயலும் திரைப்படத்தை ஒளிரப்பும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




