Vairamuthu: “மரியாதைக்குக் கூட கேட்டதில்லை… இது நாகரிகமா… ” – கவிஞர் வைரமுத்து ஆதங்கம்!

தமிழ்த் திரையுலகில் தனது பல பாடல்களின் பல்லவிகள் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார். படக்குழுவினர் தன்னிடம் அனுமதி பெறுவதில்லை என்றும், மரியாதைக்காகக்கூட ஒரு வார்த்தை கேட்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது பதிவில், “என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது. அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு, மரியாதைக்காகக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை. ஒன்றா இரண்டா…” என்று குறிப்பிட்டு, பல படத் தலைப்புகளையும் பட்டியலிட்டுள்ளார்.

ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம் , வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா , ஈரமான ரோஜாவே , நிலாவத்தான் கையில புடிச்சேன்

“இப்படி இன்னும் பல…” என்று கூறி, சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் தான் கடிந்து கொண்டதில்லை என்றும், காணும் இடங்களில் கேட்டதுமில்லை என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *