பேசறதுக்குனு ஒரு வரம்பு இருக்கிறது அல்லவா. அதுக்குனு இல்லாததையும், பொல்லாததையும் தான் வாயிக்கு வறத அடிச்சுவிட்டா என்னானு சொல்றது. அப்படி ஒருத்தரு கம்பி கட்டுனு கதையெல்லாம் எடுத்து மேடைல பேச்சுன பேச்சை நம் ஜெம் தொலைக்காட்சி மூலம் விரிவாகப் பார்க்கலாம்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு உள்ளிட்டோர் ஒரே மேடையில் இருப்பதை சுட்டிக் காட்டிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஒரு 2 மாதத்திற்கு முன்பு இப்படி இருந்திருந்தால் தமிழகத்தில் என்ன நிலைமை இருந்திருக்கும்? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு கூட்டத்தில் ஒரே ஆரவாரம் எழுந்தது.
நம் நாட்டாமை நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திருநெல்வேலி மாவட்டம் சீதப்பநல்லூரில் நடந்தது. இந்த விழாவில் மாயாண்டி குடும்பத்தாரின் அண்ணனும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், பொய்யில் புலவரும், பாஜக தலைவருமான நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நடிகர் சரத்குமாருக்கு ரூபாய் நோட்டுகளால் ஆன பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய தனியரசு, சரத்குமாரை மத்திய அமைச்சராக்க வேண்டும். சீமானை முதல்வராக்க வேண்டும் என்றெல்லாம் கதை அளந்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், இந்த மேடை எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்களா? மாப்பிள்ளை சீமான் உள்பட எல்லாரும் இங்கே இருக்கிறார்கள். ஒரு 2 மாசத்திற்கு முன்னாடி இந்த மேடை இதேபோல் இருந்திருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும் தமிழ்நாட்டில்? பார்ப்போம், இனிமேல் எப்படி நடக்கிறது என பார்க்கலாம்!
ஆனால் சில பேர் எடுத்த எடுப்பிலேயே முதல்வராக வந்துவிடுகிறார்கள்! இறைவன் சில நேரங்களில் யாரை எந்த இடத்தில் வைக்கக் கூடாதோ அந்த இடத்தில் வைத்து விடுகிறார். அதற்காக காலகட்டம், இப்போது கலிகாலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.
அவர் மேலும் பேசுகையில், எதிர்பார்ப்புடன் ஒரு கூட்டம் இருக்கும் போது 40 ஆண்டுகளுக்கு முன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த கூட்டத்திற்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர் கேட்ட உடன் கையில் இருக்கும் ரூ. 7 லட்சம் வாட்சை கழட்டி கொடுக்கிறார் சரத்குமார். இவருக்கு முதல்வராகும் அனைத்து தகுதிகளும் உள்ளது. உண்மையில் சரத்குமார் கொடை வள்ளல் என்றெல்லாம் புகழாரம் சூட்டினார்.
ஒரு நயா பைசா இல்லாமல் தேசிய கட்சியில் சரத்குமார் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். நிச்சயம் தேசிய அளவிலான பதவிகள் அவரை தேடி வரும். லட்சக்கணக்கான மக்களின் மனதை கொள்ளை கொண்டவர். அவர் ஒரு சமுதாயத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் ரசிகர் என்றால் நான் ஏற்க மாட்டேன் என பேசினார்.
இந்த கூட்டத்தில் சீமான் பேசுகையில், ஒரு கட்சியை சார்ந்து ஒருவர் இருந்தால் அவர் உறவினராக இருந்தாலும் பேசக் கூடாது. இப்படிப்பட்ட ஒரு மனப்போக்கு இருக்கிறது. எங்களுடைய அரசியல் நிலைப்பாடு, கொள்கை, கோட்பாடு வேறாக இருக்கலாம். நாங்கள் ஒரு தாய் பிள்ளை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
சரத்குமாரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். தனது உடலை பேணி பாதுகாத்து வருகிறார். இந்தியாவிலேயே பிஸியான மனிதர். 42 படங்கள் நடிக்கும் ஒரே நபர் இவர்தான். எல்லா மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு சீமான் பேசினார்.
பிறந்தநாள் கொண்டாட போன இடத்தில் இனிப்பு கொடுத்த தின்னுபுட்டு வரத விட்டுபுட்டு. சரத்குமாறுக்கு ஒரு இனிப்புச் செய்தி கொடுத்தாங்க பாருங்க இந்த மூவரும். ஈ தான் வந்து வாயில ஒட்டுலங்கற குறை. கதையளந்துட்டு வந்திருக்கும் இந்த மூவர் கருத்து பற்றி உங்கள் கருத்தை நம் ஜெம் கமென்ட்ல தெரிவிக்கவும்.

