ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் திருவுருவப்படம்!

Advertisements

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் திருவுருவப்படத்தைத் திறந்து வைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்கோவின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில், குரல் கொடுக்கும் இளங்கோவின் வாதத் திறமையைப் பார்த்துத் தான் கலைஞர் அவருக்கு அரசு வழக்கறிஞராகப் பணியாற்றும் வாய்ப்பைத் தந்தார். மேலும், வழக்கறிஞர் இளங்கோ வாக்காளர் பட்டியல் விவகாரத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.

பின்னர், தொடர்ந்து பேசிய அவர், அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று, இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருப்படம் திறக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர், பெரியார் உலக அளவில் அங்கீகரிக்கப்படுவது தமிழ்நாட்டுக்கு பெருமை என்று நான் மகிழ்ச்சிக் கடலில் உள்ளேன் எனக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *