
விழுப்புரம்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆய்வு பயணத்தின்போது முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
அவருக்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையின் இருபுறமும் காத்திருந்த பொதுமக்களைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.
