Advertisements

முதலமைச்சர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், தற்போது புதிதாக அமைந்திருக்கும் த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவைக் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில், பட்ஜெட் தாக்கல், மதுபானை நிர்வாகம் மறுசீரமைப்பு, தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisements



